மாணவர்களே... உணவக மேலாண்மை படிப்புக்கான ஹால்-டிக்கெட்கள் வெளியீடு...!

இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளில் சேர உதவும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்களை (தேர்வுக்கூடச் சீட்டுகள்) தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்களை /exams.nta.ac.in/NCHM/ என்ற இணையதளத்துக்குச் சென்று டவுன்லோடு செய்யலாம்.

என்சிஎச்எம்சிடி என்று அழைக்கப்படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்துக்கான தேசிய கவுன்சில் (சங்கம்) 1982-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இந்தியாவில் விருந்தோம்பல் மேலாண்மைக் கல்வியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு தன்னாட்சி அமைப்பாக இது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது..
இந்த தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்று வருகின்றனர்.

மாணவர்களே... உணவக மேலாண்மை படிப்புக்கான ஹால்-டிக்கெட்கள் வெளியீடு...!

இந்த தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கணினி வழியில் வரும் மே 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9 முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை (தேர்வுக் கூட சீட்டு) என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்தத் தேர்வு, ஹால்டிக்கெட் தொடர்பானத கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், தேர்வு தொடர்பாக ஏதாவது சந்தேகம் மாணவர்களுக்கு எழுந்தால் 011-4075 9000 என்ற தொலைபேசி அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Testing Agency (NTA) has released the admit cards for the National Council for Hotel Management Joint Entrance Examination (NCHMJEE-2024). Candidates who have registered for the exam can download the admit cards from the official website at exams.nta.ac.in/NCHM. Scores of NCHMJEE-2024 is used for admission to the B.Sc. (Hospitality & Hotel Administration) Course at the Institutes of Hotel Management (IHM) affiliated to the National Council for Hotel Management and Catering Technology (NCHM&CT) for the Academic Year 2024-25. The examination will be conducted by the National Testing Agency (NTA) on May 11, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+