கர்நாடக சிஇடி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு (சிஇடி) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக பொறியியல், மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர சிஇடி தேர்வு நடத்தப்படுகிறு. கர்நாடக தேர்வுகள் ஆணையம் (கேஇஏ) இந்தத் தேர்வுகளை நடத்துகிறது.

கர்நாடக சிஇடி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் கேஇஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

இந்த முடிவுகளைக் காண கேஇஏ இணையதளமான http://kea.kar.nic.in/ -ல் லாக்-ஆன் செய்யவேண்டும்.

பின்னர் உங்களது பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து முடிவுகளைப் பெறலாம். மேலும் மதிப்பெண்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.

சிஇடி தேர்வு பொறியியல் பிரிவில் பெங்களூர் விவிஎஸ் சர்தார் படேல் கல்லூரியின் மிலிந்த் குமார் வாதிராஜு முதலிடம் பிடித்தார். மருத்துவம், பல் மருத்துவம் பிரிவில் முதல் ரேங்க்கை மங்களூர் ஆல்வா பியு கல்லூரியின் ஜி. அனந்த் பிடித்தார்.

English summary
Looks like a weekend of results. The Karnataka Examinations Authority (KEA) has declared the results of the Karnataka Common Entrance Test (KCET 2016) today at 11.00 am. The results have been announced on the official website of KEA. Candidates who have appeared for the KCET 2016 can check their results on the website. The CBSE has also delcared the Class 10 results today. How to check KCET 2016 results? Candidates have to log on to the official website of KEA. Click on any of the 2 live links provided. Enter yorur registration number in the space provided and submit. On successful submission of the above details, results will be displayed on the screen. Candidates are required to take a print out of their KCET 2016 results for further reference. Also read: Career options after Class 12 The KCET 2016 was held across the state of May 4 and 5 2016 across various centres of the state.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia