கான்பூர் ஐஐடி-யில் திட்ட மேலாளர் பணியிடங்கள் காலி....!!

Posted By:

டெல்லி: கான்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் திட்ட மேலாளர், திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கான்பூர் ஐஐடி-யில் திட்ட மேலாளர் பணியிடங்கள் காலி....!!

திட்ட மேலாளர், மூத்த திட்ட உதவியாளர் என 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. திட்ட உதவியாளரப் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பி.டெக் படித்திருக்கவேண்டும் அல்லது எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மூத்த திட்ட மேலாளர் பணியிடங்களுக்கு, பட்டமேற்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும், 12 ஆண்டு பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும்.

பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை The Coordinator, Centre for Nanosciences, Northern Lab -II Extension, Indian Institute of Technology Kanpur (INDIA) என்ற முகவரிக்கு மே 2-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

English summary
Applications are invited by Indian Institute of Technology Kanpur (IIT-K) for the recruitment of 4 Project Associate and Project Manager posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia