டெல்லி: ஐடிபிஐ வங்கியில் தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியனுபவம் இருக்கவேண்டும். உரிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். மண்டல மேலாளர் அல்லது பொது மேலாளர் (களப் பணி) அந்தஸ்தில் அவர்கள் பணிபுரிந்திருக்கவேண்டும். அவர்களுக்கு வயது 65-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக மாதம்தோறும் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The General Manager-Recruitment Section, Human Resources Department, IDBI Bank Ltd., IDBI Tower, 21st floor, WTC Complex, Cuffe Parade, Mumbai என்ற முகவரிக்கு மே 7-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களை http://www.idbi.com/index.asp என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












