சென்னை: பெங்களூரிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோஇன்பர்மேட்டிக்ஸ் அண்ட் அப்ளைட் பயோடெக்னாலஜி (ஐபிஏபி) இன்ஸ்டிடியூட்டில் எம்.எஸ்சி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பி,டெக், பி.இ., பி.எஸ்சி., எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படிப்புக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தவேண்டும்.
இந்த விண்ணப்பக் கட்டணத்தை டிடியாகவோ, என்இஎஃப்டி மூலமாகவோ செலுத்தலாம்.
டி.டி.யை Institute of Bioinformatics and Applied Biotechnology என்ற பெயரில் பெங்களூரில் செல்லத்தக்கதாக மாற்றவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.ibab.ac.in/index.php/admission-procedure/#guide என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு அதன் மூலம் சேர்க்கைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த நுழைவுத் தேர்வானது. 100 நிமிடங்களுக்கு நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு வைக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் படிப்பில் சேரலாம்.


Click it and Unblock the Notifications
