புதுடெல்லி: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திரா காந்தி திறந்நிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல இயக்குநர் பி. சிவஸ்வரூப் கூறியதாவது: இந்த மாதம் முதல் இந்தத் தேர்வுக் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வுக் கட்டணத்தைத் திருத்தி அமைத்துள்ளோம்.

இந்தியாவில் கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்திரா காந்தி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்திய மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் கல்வி கிடைக்க வழிவகை செய்கிறது இந்திரா காந்தி பல்கலைக்கழகம். தேர்வுக் கட்டணம் ரூ.60 ஆக இருந்தது ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது குறுகிய கால தொழில்நுட்பப் பயற்சிக் கல்வியை வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தப் படிப்புகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

