டெல்லி பல்கலை.யில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ சேரணுமா?

சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

எக்சிகியூட்டிவ் எம்பிஏ, ஹெல்த்கேர் நிர்வாகத்தில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ என இரு படிப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

டெல்லி பல்கலை.யில் எக்சிகியூட்டிவ் எம்பிஏ சேரணுமா?

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10, 12-வது முடித்து பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கலை, அறிவியல், வணிகம், சமூக அறிவியல், கணிதம், புள்ளியியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் என எந்தத் துறையில் வேண்டுமானாலும் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் வேலையில் சேர்ந்து 5 வருட அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ,.1000 செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.,350 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கல்வித் தகுதி, அனுபவம், திறனறித் தேர்வு எழுதும் திறமை, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி நவம்பர் 15 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.du.ac.in/du -ல் தொடர்புகொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் 2016 கல்வியாண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Delhi (DU), Delhi has invited applications for admission to executive Master of Business Administration (MBA) and Executive MBA in Health Care Administration programmes offered at Faculty of Management Studies (FMS). Admissions are for the session July 2016.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X