புதுடெல்லி: டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 4,669 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 3,611-ம், பெண் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 1,058-ம் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 24-க்குள் இருக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15 ஆகும். வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை http://www.delhipolice.nic.in/ என்ற இணையதளத்தில் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












