சென்னையில் உள்ள சிப்பெட் மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பயில வேண்டுமா...!!

மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனமான சிப்பெட்டில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த மாணவர்கள் சிப்பெட் உயர்கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும், பிளாஸ்டிக் பொறியியலில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்காக மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://cipet24.onlineregistrationform.org/CIPET என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
சிப்பெட் என்று அழைக்கப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகமானது (CIPET or Central Institute of Plastics Engineering and Technology) இந்திய அரசின், வேதியியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக சிறப்பான முறையில் செயல்படுகிறது.

சென்னையில் 1968-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இந்த மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) சென்னையில்தான் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், போபால், புவனேஸ்வரம், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

சென்னையில் உள்ள சிப்பெட் மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பயில வேண்டுமா...!!

பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகளை சிப்பெட் உயர்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

சென்னையில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான சிப்பெட், பிளாஸ்டிக் பொறியியலில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான இந்த படிப்புகளுக்கு தற்போது மாணவர் சேர்க்கையை சிப்பெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.

இதன்படி, பிளாஸ்டிக் மோல்டு தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 3ஆண்டு டிப்ளமோ படிப்புகள் இங்கு சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன. இதில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

சிப்பெட் நிறுவனத்தில் படித்து டிப்ளமோ பெற்றவர்கள் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பி.டெக் வகுப்புகளுக்கு நேரடியாக சேரலாம். மேலும் இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை https://cipet24.onlineregistrationform.org/CIPETஎன்ற இணையதள முகவரி மூலம் மாணவ, மாணவிகள், விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த படிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9600254350, 9941844937, 9345022712என்ற தொலைபேசி எண்களையோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.

மேலும், www.cipet.gov.in என்ற இணைய தளத்தின் மூலமாகவும் மாணவ, மாணவிகள், தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET is a premier Academic institution for higher & technical education under the Ministry of Chemicals & Fertilizers, Govt. of India fully devoted in all the domains of plastics. To offer blend of specialized Academic and Skill Development Training Programs in the field of Polymer Science & Technology in order to provide qualified Human Resources with entrepreneurship qualities for Polymer & Allied Industries. Undergraduate and Postgraduate programs in Engineering / Technology is offered at all our Institute of Petrochemicals Technology (IPT) centres. These centres are located at Ahmedabad, Bhubaneswar, Chennai, Kochi, Lucknow, Raipur, Jaipur and Murthal. The Degree Courses are affiliated to the respective State Universities in which the IPT is located.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+