டெல்லி: கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் அமைந்துள்ள மத்திய இந்திய மொழிகள் இன்ஸ்டிடியூட்டில் (சிஐஐஎல்) பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

அசோசியேட் ஃபெல்லோ, ஸ்டெனோகிராபர், சீனியர் ஃபெல்லோ, லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.
தகுதி உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும். சம்பந்தப்பட்ட பதவிக்குத் தேவைப்படும் கல்வித் தகுதிகளை ஒருங்கே பெற்றிருக்கவேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரஙகளுக்கு http://www.ciil.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பங்களை The Project Director, Centre of Excellence for Studies in Classical Kannada, Central Institute of Indian Languages, Manasagangothri, Mysore - 570006 என்ற முகவரிக்கு ஏப்ரல் 20-க்குள் அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications












