தமிழக பள்ளிகல்வி இயக்குநகரகத்தின் இணையதளங்கள் புதுபொலிவுடன் மாற்றப்பட்டுள்ளன . தமிழக பள்ளிக்கல்வி இணையத்தளம் மாற்றத்துடன் வண்ணமயமான உள்ளீடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் என யார் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்துமாறு அழகுடன் மிளிர்கின்றது .

பள்ளிகல்வி இயக்குநரகத்தின் இணையத்தளமானது நேரடியாக 32 மாவட்டங்களை இணைத்துள்ளது . பள்ளிகல்வி இணையத்தில் வந்து நேரடியாக மாவட்ட கல்வி இயக்குநகரக இணைப்பை எளிதாக பெறலாம் http://dse.tnschools.gov.in/# இவ்விணையத்திலிருந்து நேரடியாக மாவட்டப் பள்ளிக் கல்வி இயக்குநகரப் பெயரை பெரிய ஆங்கில எழுத்தில் http://dse.tnschools.gov.in/districtname தெரிவித்தால் நேரடியாக அந்த மாவட்ட இணையத்தளத்தில் இணைப்பு பெறும் . நேரடியாக குறிப்பிட்ட பள்ளிகளையும் இந்த இணையத்தளங்கள் மூலம் சென்று பெறலாம் .
பள்ளிகல்வித்துறையின் இந்த புதுப் பொலிவுகளை பார்த்தால் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் அளவிற்கு பள்ளிகள் செயல்படும் என்பதில் எவ்வித மாற்றுகருத்தும் இல்லை. பள்ளிகல்வி இயக்குநகரக தளத்தில் தொடக்கமாக திருக்குறள் அனைவருக்கும் வழிகாட்டியாக வரவேற்கின்றது .
நல்ல நீல நிறத்துடன் பொலிவு பெறுகிறது . நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் படத்தொகுப்பு அத்துடன் புதிய அறிவிப்புகளுக்கென அழகான ஒரு பாக்ஸ் அத்துடன் பள்ளிகள், மாணவர்கள் , ஆசிரியர்கள் , சிறந்த பள்ளிகள் ஆசிரியர்கள் கல்வி அலுவலகங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அடங்கிய சிறப்பானத் தளமாக அமைந்துள்ளது . இது தமிழ்கக் கல்வித்துறையின் பொழிவையும் வருங்கால வளர்ச்சியையும் சுட்டும் விதமாக அமைந்துள்ளது . பள்ளியின் அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தளம் மூலம் அறியலாம்
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












