பிஜாப்பூர்: கர்நாடக மாநிலம் பிஜாப்பூரிலுள்ள பி.எம். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கையை பிஜாப்பூரிலுள்ள பிஎல்டிஇ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

எம்பிபிஎஸ் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து நடைபெறும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பிஎல்டிஇ நடத்தும் இந்தத் தேர்வே சேர்க்கைக்கான தேர்வு ஆகும்.
படிப்புக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்புடம். இதை டிடியாக 'The Registrar, BLDE University என்ற பெயரில் Vijayapura (Bijapur)-586103' என்ற ஊரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மே 20-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://bldeuniversity.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.


Click it and Unblock the Notifications

