பாரத மிகு மின் நிறுவனத்தில் என்ஜினீயிருக்கு காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: பாரத மிகு மின் நிறுவனத்தில்(பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) 200 பயிற்சி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செய்து தேர்வுக்குத் தயாராகலாம்.

பாரத மிகு மின் நிறுவனத்தில் என்ஜினீயிருக்கு காத்திருக்கும் பணியிடங்கள்!!

மத்திய மின்சார அமைசகத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 200 பணியிடங்கள் காலியாகவுள்ளன. எலக்ட்ரிக்கல் பிரிவில் 115 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், மெட்டலார்ஜி பிரிவில் 10 இடங்களும் காலியாக உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு http://www.bhel.com/home.php என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களைப் பெற கேட் தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும். இந்தப் பணியிடங்களுக்காக தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுபவர்கள் http://www.bhel.com/home.php என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அட்மிட் கார்டைப் பெறலாம்.

தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்படும்.

English summary
Bharat Heavy Electricals Limited (BHEL) invited applications for 200 Engineer Trainee Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents so as to reach on or before 01 February 2016. Admit Card for BHEL Engineer Trainee Posts Details in this regard can be found from the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia