சென்னை: பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ்(பெல்) நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மொத்தம் 10 என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக் படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 25 அல்லது அதற்குக் குறைவாக இருக்கவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் இணையதளமான http://www.bel-india.com/-ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

