எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் அரியலூர் மாணவி தற்கொலை..!

Posted By:

அரியலூர் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் கலைவாணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வின் முடிவில் தான் எதிர்பார்த்திருந்த மார்க் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி கலைவாணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் அரியலூர் மாணவி தற்கொலை..!

இந்த ஆண்டு தமிழகத்தில் 96.2% மாணவிகளும், 92.5% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழில் 69 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். ஆங்கிலத்தில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 17,481 பேர் முழுமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 61, 115 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் இருந்த போதிலும் அரியலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் காலனியைச் சார்ந்த மாணவி கலைவாணி தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவிலை என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவ்ம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Kalaivani fire committed suicide due to the expected score in the 10th standard general exam is causing great concern in Ariyalur district.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia