வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)அறிவித்திருக்கும் காலியாக உள்ள 6,035 'கிளார்க்' பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது.
மிஸ் பண்ணிடாதீங்க..அப்புறம் பீல் பண்ணுவீங்க..! ஆன்லைன் வாயிலாக, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, ஐ.பி.பி.எஸ்., அறிவித்துள்ளது.

நிர்வாகம் : வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கிளார்க் (Clerk)
மொத்த காலிப் பணியிடங்கள் : 6,035
கல்வித் தகுதி
'கிளார்க்' பணிக்கு, அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்(Bachelor's Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் கணினி உபயோகத்தில் போதியளவு அனுபவம் மற்றும் கணினி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருந்தால், கூடுதல் தகுதி மற்றும் சிறப்பாக கருதப்படும்.
எந்தெந்த வங்கிகள்
Bank of Baroda
Canara Bank
Indian Overseas Bank
UCO Bank
Bank of India
Central Bank of India
Punjab National Bank
Union Bank of India
Bank of Maharashtra
Indian Bank
Punjab & Sind Bank
வயது வரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம். 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.175/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை படித்து, கட்டுரையின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஜூலை 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்கு, இன்னும் மூன்று நாட்கள்.
தேர்வு முறை
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட்டு, கிளார்க் பணியில் அமர்த்தப்படுவர்.
Prelims exam
Main exam
Personal interview
ஊதியம்
Clerk பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது, தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப, IBPS ஆல் மாத ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://www.ibps.in/crp-clerical-cadre-xii/https://www.ibps.in/crp-clerical-cadre-xii/
விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பாணை வாயிலாக, மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள முடியம்.


Click it and Unblock the Notifications












