அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!

அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!

 

அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், சேர்க்கை குறியீட்டு எண் உள்ளிட்ட விபரங்களை அண்ணா பல்கலை ஆன்லைன் வழியில் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் மொத்தம் 486 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதனை https://www.annauniv.edu/cai/Options.php என்னும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அந்த பட்டியலின் ஒரு பகுதியாக பொறியியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இவற்றில் ஏதேனும் ஓர் பிரிவில் சேர விரும்பும் பட்சத்தில் இந்த பட்டியல் உதவிகரமாக இருக்கும்.

மேலும், அண்ணா பல்கலையின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்தும், இப்பட்டியலில் இடம்பெறாத கல்லூரிகள், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அங்கீகாரம் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Releases list of approved engineering colleges in tamilnadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X