யெஸ் (YES) வங்கியில் காலியாக உள்ள கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களும், விருப்பமானவர்களும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://yesforyou.darwinbox.in/ms/candidate/careers என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.
யெஸ் வங்கி (Yes Bank) என்பது இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த வங்கியாகும். இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார்த் துறை வைப்பகமான இந்த வைப்பகத்தை ரானா கபூர் தொடங்கினார். இந்தியாவின் மூன்றாவது நம்பிக்கையான தனியார் வைப்பகமாக 2014-ல், இவ்வைப்பகம் வாக்களிக்கப்பட்டுத் தெரியப்பட்டது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வசதியாக யெஸ் வங்கி சார்பாக ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ UPI கட்டண சேவையை கடந்த ஜூனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி தங்கள் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டை BHIM, PhonePe, Paytm, Google Pay, Slice, MobiKwik மற்றும் PayZapp போன்ற UPI செயலிகளுடன் இணைக்கலாம். அவ்வாறு இணைக்கப்பட்ட உடன், வாடிக்கையாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் கிரெடிட் கார்டு அடிப்படையிலான பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் 'கிரெடிட்-ஃப்ரீ' கால அம்சத்தைப் பெறலாம். இது முன்னர் POS/eCom அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இருந்தது. மேலும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் வசதியையும் இது மேம்படுத்துகிறது. ரூபே கிரெடிட் கார்டு இல்லாத யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் விர்ச்சுவல் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டைப் பெற்று அதை தங்களுடைய தற்போதைய UPI செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து யெஸ் பேங்க் செயல் இயக்குநர் ராஜன் பென்டல் கூறியதாவது
நாட்டிலுள்ள அனைத்து UPI வணிகப் பரிவர்த்தனைகளில் 40 சதவீதப் பங்களிப்பை யெஸ் வங்கி வழங்குகிறது. எங்களின் டிஜிட்டல் திறமையைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய திறன்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளோம்.
RuPay கிரெடிட் கார்டில் UPI வசதியை இயக்குவது வாடிக்கையாளருக்கு பல நன்மைகளை வழங்கும். மேலும் UPI பிளாட்ஃபார்மில் கிடைக்கும் லட்சக்கணக்கான வணிகர்களிடையே பணம் செலுத்தும் தன்மையை அதிகரிக்கும். அத்துடன் கிரெடிட் கார்டின் பலன்களையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யெஸ் பேங்க், தனது வாடிக்கையாளரின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. சமீபத்திய வட்டி உயர்வின்படி, யெஸ் வங்கி இப்போது பொதுக் குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 8.25% வரையிலும் ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு வட்டி கொடுக்கிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமைவாய்ந்த யெஸ் வங்கியில்தான் தற்போது கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண முடியும்.
கிளை மேலாளர், விற்பனை அதிகாரி (Branch Manager, Sales Officer) பணியிடங்களுக்கான சம்பள விவரம்:
இந்த யெஸ்(YES) வங்கி சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளத்தை பெற்றுக் கொள்வர்.
பணியிடங்களுக்குத் தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://yesforyou.darwinbox.in/ms/candidate/careers என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து பெறலாம்.


Click it and Unblock the Notifications












