விழுப்புரம் கைய்ஸ்.... 35 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு...!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும், இந்த சிறப்பு மெகா வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 35 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

எப்போது முகாம்...!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில், டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிறப்பு மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம், விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரியில் நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் 35 ஆயிரம் பேருக்கு வேலை...!

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள விழுப்புரம் அரசு சட்ட கல்லூரியில், டிசம்பர் 23 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

8 முதல் பி.இ., வரை

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, முதுகலை பட்டம், பி.இ., பி.டெக் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர். வேலை அளிக்கும் நிறுவனங்கள், வேலை தேடும் இளைஞர்களையும் முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

ஊதியம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள

Muthoot Finance Pvt Ltd , Nursing Station Healthcare Private limited, JAILAXMI AUTO WORKS AND AGENCIES PVT LTD, ALUKKAS GOLD RETAIL INDIA PVT LTD, லூகாஸ் டி.வி.எஸ்., உள்பட பல நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெறுவர்.

முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/162312070019

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

ASSISTANT COORDINATOR / [email protected] /9499055906

JEO ORGANISER /[email protected]/9442208674

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Do you know that more than hundred leading private companies are going to participate and select the deserving people for their companies?... Buy Youths... Just click on the information below to find out where...! Dr. Artist Centenary Special Mega Private Sector Employment Camp is being held.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+