மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தறபோது பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 247 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சிவில், மெக்கானிக்கல், தொலை தொடர்பு போன்ற தறைகளில் பி.இ, பி.டெக் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வின் பெயர் : Engineering Services
மொத்த காலிப் பணியிடங்கள் : 247
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil Engineering Cadre, Mechanical Engineering, Electrical Engineering and Electronics மற்றும் Telecommunication Engineering பாடப்பிரிவுகளில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Graduate Membership Examination அல்லது Associate Membership Examination போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அதாவது, 02.01.1992 முதல் 01.01.2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 20.10.2021 என்ற தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












