UPSC: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் யுபிஎஸ்சி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I) 2021 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I) 2021 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 341 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏர் ஃபோர்ஸ், கடற்படை போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் யுபிஎஸ்சி!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

துறை : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I)

பணி மற்றும் பணியிட விபரங்கள்:

  • இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் - 100
  • இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா - 22
  • விமானப்படை அகாடமி, ஹைதராபாத் - 32
  • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை - 170
  • அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை - 17

மொத்த காலிப் பணியிடங்கள் : 341

கல்வித் தகுதி :

I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகம், பொறியியல் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 11.01.2022ம் தேதிக்குள் https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2021: Apply Online For CDS-I post at upsconline.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X