மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது உதவி ஆணையர், Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மேலாண்மை : மத்திய அரசு
துறை : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I)
பணி : Assistant Commissioner, Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS), Administrative Officer மற்றும் Assistant Professor உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 180-க்கும் கூடுதலான பணிகள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
பணி முன் அனுபவம் :
மேற்கண்ட பணிகளுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணிகளுக்கு லெவல் -7 முதல் லெவல் -11 வரையில் பணிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 13.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












