காப்பீடு துறையில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை ...!

மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் பணியிடங்களில், தமிழகத்தில் மட்டும் 78 இடங்கள் காலியாக உள்ளன.

நிர்வாகம் : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (United India Insurance Company)

மேலாண்மை : மத்திய அரசு

பொதுத்துறை நிறுவனத்தில் 300 காலிப் பணியிடம்...!

பணி விவரம்

Ø உதவியாளர் (Assistant)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 300

விண்ணப்பிக்க கடைசி தேதி:06.01.2024

கல்வி தகுதி:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

உதவியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, முதலில் மாதம் ரூ.37,000 வரை ஊதியம் வழங்கப்படும். இதர சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும். அதன் பின், ரூ.62,265 வரை ஊதியம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø இப்பதவிகளுக்கு 16.12.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 06.01.2024. விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும், ஜனவரி 6 ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பக் கட்டணம்

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஜி.எஸ்.டி., கட்டணத்துடன் சேர்த்து ரூ.1000 செலுத்த வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30.09.2023 அன்று 21 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 01.10.1993 தேதிக்கு முன்பு அல்லது 30.09.2002 தேதிக்கு பின்பு பிறந்திருக்க கூடாது.

இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவர்கள். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

தேர்வு முறை

Ø ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில், தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகசமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://uiic.co.in/en/careers/recruitment

https://uiic.co.in/recruitment/details/15257

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
United India Insurance Company Limited is a leading public sector general insurance company. It has been announced that eligible persons can apply for 300 vacant assistant posts in this company with a premium of Rs.17,644 crores by January 6.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+