இளைஞர்களே...ஓடிவாங்க...உதவித்தொகையுடன் திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி...!

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) இளைஞர்களுக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதிவாய்ந்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://trichy.bhel.com/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

திருச்சிக்கு பெருமை சேர்த்து வரும் நிறுவனமாக பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 680 அப்ரண்டீஸ் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம்தோறும் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படும்.

கிராஜுவேட் அப்ரண்டீஸ் (Graduate Apprentice), டெக்னீஷியன் அப்ரண்டீஸ்( Technician Apprentice), டிரேட் அப்ரண்டீஸ் (Trade Apprentice) பிரிவில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), திருச்சிராப்பள்ளி வெளியிட்டுள்ளது.

இந்த மத்திய அரசு பணிகளில் என மொத்தம் 680 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான https://trichy.bhel.com/ -ல் 17.11.2023 @ 10.00 AM முதல் 01.12.2023 @ 11.45 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஜுவேட் பிரிவில் 179 பணியிடங்களும், டெக்னீஷியன் பிரிவில் 398 பணியிடங்களும், டிரேட் பிரிவில் 103 பணியிடங்களும் என என மொத்தம் 680 பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.

உதவித்தொகையுடன் திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி...!

கிராஜுவேட் அப்ரண்டீஸ் பிரிவுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீஷியன் அப்ரண்டீஸ் பிரிவுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிரேட் பிரிவுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 12ம் வகுப்பு + ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

01/11/2023 அன்றைய நிலவரப்படி விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகளாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும் OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடங்களும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு (குறைந்தபட்சம் 40% ஊனம் உள்ளவர்கள்), அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கிராஜுவேட் பிரிவுக்கு ரூ.9 ஆயிரமும், டெக்னீஷியன் பிரிவுக்கு ரூ.8 ஆயிரமும், டிரேட் பிரிவுக்கு
ரூ.7700/- to ரூ.8050-ம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு,ஆய்வு அடிப்படையில் இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://trichy.bhel.com/ என்ற இணையதள லிங்க் மூலம் இப்பணிக்கு வரும் 01.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Heavy Electricals Limited (BHEL), Trichy has invites eligible candidates for the Technical Apprenticeship program.Candidates are asked to complete the accessible application form and submit the required papers on or before 01.12.2023
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+