தமிழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,151 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தத் தேர்வை எழுதியுள்ள தேர்வர்கள் குஷியில் உள்ளனர். இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள், குரூப் 2ஏ பதவிகளில் 5,990 பணியிடங்கள் என மொத்தம் 6,151 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2021 பிப்ரவரியில் வெளியானது.
நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் என பல பணிகளுக்கான தேர்வாகும் இது.
இதற்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 25ல் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் முடிவுகள் வெளியாகாத நிலை நீடித்தது.
இந்நிலையில் மொத்தம் 6,151 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நாளைதான் (ஜனவரி 12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12- ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 12-க்கும் பதிலாக 11-ம் தேதியே, அதாவது அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தேர்வை எழுதிய தேர்வர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இணையதள முகவரி:
இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அடுத்த கட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












