செம குஷியில் தேர்வர்கள்.... டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு...!!

2024ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. ஆண்டு கால அட்டவணை வெளியாகியுள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வகக்காக தயாராகி வந்த இளைஞர்கள் குஷியில் உள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்? தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

செம குஷியில் தேர்வர்கள்.... டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு...!!

இவ்வாறு கால அட்டவணை வெளியிடுவது, அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை கடந்த 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது. இதனால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், டிச.15-ல் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) தற்போது எதிர்வரும் 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த செய்தி வெளிவந்துள்ளது என்பதால் தற்போது தேர்வர்களும் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

இந்த ஆண்டு கால அட்டவணையின்r படி, வருடத்தின் துவக்கத்திலேயே, அதாவது ஜனவரி மாதத்திலேயே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப்பணியிடங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஆகஸ்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

65 பணி இடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் குரூப் 1 பணி இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதேபோல் குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.
ஆண்டு கால அட்டவணை வெளியாகியுள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வகக்காக தயாராகி வந்த இளைஞர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual Planner 2024.pdf என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) has released its annual planner today. TNPSC has conducted the examinations as per the Annual Planner.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+