தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) Combined Geology Subordinate Service (CGSS) எனும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு (CGSS)
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணி : Combined Geology Subordinate Service (CGSS)
மொத்த காலிப் பணியிடங்கள் : 26
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Geology பாடப்பிரிவில் பட்டம், M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpscexams.in எனும் இணையதளத்தின் மூலம் 24.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பதிவுக் கட்டணம் - ரூ.500
- தேர்வுக் கட்டணம் - ரூ.150
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள் :
- அறிவிப்பு வெளியான நாள் - 25.08.2021
- விண்ணப்பம் தொடங்கிய நாள் - 25.08.2021
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 24.09.2021
- CGSS தேர்வு தேதி - 20.11.2021 AN & FN and 21.11.2021 FN
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












