தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப் பணிகள் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் என மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்கள் 84 காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20,600 -
75,900 வரை ஆகும்.
இந்த பணியிடத்துக்கு 10 - 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் உடைய வேளாண்மை படிப்பில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்
உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் 179 காலியாகவுள்ளன. ஊதியம் ரூ. 20,600 - 75,900 வரை இருக்கும்.
10 - 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் உடைய தோட்டக்கலை படிப்பில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினர் 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்கக் கூடாது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் வரும் 24.12.2023-ம் தேதியாகும்.
இந்த பதவிக்கான தேர்வு முறை ஒற்றை நிலையினைக் கொண்டது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இணையவழிச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தெரிவுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் தகவல்களுக்கு தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in-ல் காணலாம்.


Click it and Unblock the Notifications












