தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறைக்கு உட்பட்ட அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், ஓதுவார், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை
பணியிடம் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
பணி : Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
Typist - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறு Typing Certificate பெற்றிருக்க வேண்டும்.
Archakar (Priest) - தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, வேத பாடசாலையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Parisarakar - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பூஜை பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
Menom Set - தமிழ் எழுத, படிக்க தெரிந்திருப்பதோடு இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Watchman, Night Watchman, Thiruvalagu, Animal Caretaker உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Oduvar - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.15,300 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திரக்கோவில், சென்னை - 03
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












