ஸ்தபதி பணியிடங்கள் அறிவிப்பு 2023
திருக்கோயில் புனரமைப்பு, பாதுகாத்தல் பணிகளில், காலியாக உள்ள 48 மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.| விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மண்டல ஸ்தபதி
Ø உதவி ஸ்தபதி
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.01.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 48
ஊதியம்
· மண்டல ஸ்தபதி
ஊதியம்: Rs.25,000/-
· உதவி ஸ்தபதி
ஊதியம்: Rs.20,000/-
தொகுப்பூதியத்தின் கீழ், இப்பணியிடங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளன.
கல்வித்தகுதி
Ø மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ø அதாவது Bachelor of Technical in Traditional Architecture அல்லது Fine Arts in Traditional Sculpture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø திருக்கோயில்கள் புனரமைப்பு பணியில் குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
ü விண்ணப்பதாரர் வயதானது, 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 40 வயதை பூர்த்தி செய்தவராக வேண்டும்.
ü பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ü பணியிடங்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
ü நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.
ü விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் குறித்து பெறப்பட்ட சான்றிதழ் அசல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ü நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. நியமனம் செய்யப்பட்ட தேதி முதல் ஓராண்டு அல்லது பணியிடம் நிரந்தமாக நிரப்படும் வரை(இதில் எது முன்னதோ அதுவரை) ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும். அரசால் அங்கீகரிக்கப்படும் பணி விதிகளுக்கு உட்பட்டது.
ü விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ü பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034 என்ற முகவரிக்கு, 20.01.2023 பிற்பகல் 3:00 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
ü அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!
https://hrce.tn.gov.in/hrcehome/index.php
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/153/document_1.pdf


Click it and Unblock the Notifications












