TNEB TANGEDCO: தமிழ்நாடு மின் வாரியத் துறைத் தேர்வு தேதி வெளியீடு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, கணக்கு அதிகாரி, Internal Audit Officer, Subordainat Officer உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெறவிருந்தது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, கணக்கு அதிகாரி, Internal Audit Officer, Subordainat Officer உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக அத்தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

TNEB TANGEDCO: தமிழ்நாடு மின் வாரியத் துறைத் தேர்வு தேதி வெளியீடு!

தொடர்ந்து, தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் மேற்கண்ட TNEB பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அத்தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட விபரங்களை காணலாம் வாங்க.

நிர்வாகம் : தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TNEB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Technicial Officer, Accounts Officer, Internal Audit Officer, Subordainat Officer பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி : TANGEDCO மற்றும் TANTRANSCO ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வுக் கட்டணம் :

  • இத்தேர்விற்கு ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி வரி ரூ.90 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • 03.11.2021 தேதிக்குள் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு தேதி :

TNEB துறைத் தேர்வு வரும் 27.11.2021 அன்று நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 16.11.2021 அன்று வெளியிடப்படும்.

Subject நாள் தேதி
Opening of Application for Registration வெள்ளி 01.10.2021
Closing of Application ஞாயிறு31.10.2021
Last date for fees payment புதன்03.11.2021
Generation of Hall Ticket செவ்வாய்16.11.2021
Exam Dates சனி27.11.2021

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் http://www.tnebltd.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 30.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnebltd.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO: TNEB TANGEDCO Departmental Test (Nov) Dates announced
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X