தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (TNAU)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
பணி : Technical Assistant, Junior Research Fellow, Field Investigator மற்றும் Senior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வ நிறுவனத்தில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.டெக், டிப்ளமோ, எம்பிஏ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
- SRF - ரூ.31,000 (With NET), ரூ.25,000 (Without NET)
- Technical Assistant - ரூ.12,000
- JRF - ரூ.16,000 முதல் ரூ.20,000
- Field Investigator - ரூ.15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 06.09.2021, 07.09.2021 மற்றும் 14.09.2021 தேதியன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு 06.09.2021, 07.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnau.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












