தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TN MRB) காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 119 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.13 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பணி : உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer)
மொத்த காலிப் பணியிடங்கள் : 119
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் அதிகபட்சம் ரூ.1,13,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதி முதல் 21.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 350
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications

