மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள Project Associate மற்றும் Senior Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Translational Health Science and Technology Institute (THSTI)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 12
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Research Associate - I - 3 பணியிடங்கள்
- Project Associate -I - 2 பணியிடங்கள்
- Senior Project Associate - 2 பணியிடங்கள்
- Research Associate - I/II - 1 பணியிடங்கள்
- Project Associate -II - 3 பணியிடங்கள்
- Research Associate - II - 1 பணியிடங்கள்
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc., Ph.D in Life Sciences, M.V.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.49,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.thsti.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.thsti.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












