Thenkasi Mega Job Fair 2023
தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் (தென்காசி) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 4000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு, 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

தனியார் ஆட்சேர்ப்பு முகாம் 2023
எங்கே....!
தென்காசி மாவட்டம், புளியங்குடி, எஸ் வி நகர், சங்கரன்கோவில் சாலையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெறுகிறது.
எவ்வளவு இடங்கள் தெரியும்?
முகாமில் பங்கேற்கும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் நர்சிங் வரை
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
சென்னை, திருச்சி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
இவ்வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக, தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
மறக்காதீங்க...!
நேர்காணல் மார்ச் 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. சீக்கிரம் போங்க... வேலைவாய்ப்பு ஆணையுடன் திரும்பி வாங்க....
ஆவணங்கள் என்னென்ன?
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/382303010002
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/382303010002
கூடுதல் விபரங்களுக்கு...!
Mr. GUNASEKARAN
JOBFAIR Employer Organizar [email protected]
6381552624
Mr. Sankar
JOB FAIR Candidates Organizar [email protected]
9952706050


Click it and Unblock the Notifications












