நீங்கள் இன்ஜினியரா...மத்திய அரசு அழைக்கிறது...!

நீங்கள் இன்ஜினியராக இருந்தால், மத்திய அரசில் பணிபுரிவதற்கான வாய்ப்பு தற்போது உங்களுக்கு வந்துள்ளது.

மத்திய அரசில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ssc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

எஸ்எஸ்சி எனப்படும் இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.

இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய அரசின் கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிற்து.

நீங்கள் இன்ஜினியரா...மத்திய அரசு அழைக்கிறது...!

மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்தத் தேர்வாணையம் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்போது எஸ்எஸ்சி சார்பில் ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 758, எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல் 37, மெக்கானிக்கல் 15, எலக்ட்ரிக்கல் 128 உட்பட 968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ படிப்புகளை தேர்வர்கள் முடித்திருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர் 18.4.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: இந்த மத்திய அரசுப் பணியிடங்களுக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: எஸ்எஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு 18.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி : கூடுதல் விவரங்களுக்கு ssc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Staff Selection Commission (SSC) announced the SSC JE Notification 2024 for Junior Engineer profile in the field of Civil, Mechanical, and Electrical Engineering for 968 vacancies. This is a good chance for candidates who want to make a career in the SSC organization as a Junior Engineer can apply online till 18 April 2024. As the notification has come out, interested candidates can download it from here and learn all the important information related to the SSC JE Exam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+