மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Young Professional
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், டிப்ளமோ, எம்.பிஏ, சட்டம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












