பங்கு மற்றும் நிதி சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' எனும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI or Securities and Exchange Board of India) இயங்கி வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வாரியத்தில், காலியாக உள்ள 25 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(SEBI)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
Assistant Manager (Legal Stream)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.07.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சட்டப்படிப்பு, எல்எல்பி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பிடபிள்யூடி (பொது) பிரிவினர், பிடபிள்யூடி (ஓபிசி) பிரிவினர், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினர் ஆகியோருக்கான வயது வரம்பு தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. வயது வரம்பு என்பது 31.05.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
மூன்று நிலை தேர்வு செயல்முறையை உள்ளடக்கியது. அதாவது கட்டம் I (ஒவ்வொரு 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் திரையிடல் தேர்வு), இரண்டாம் கட்டம் (ஒவ்வொரு 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் தேர்வு) மற்றும் கட்டம் III (நேர்காணல்). கட்டம் I இல் தாள் 1 மற்றும் தாள் 2 க்கு எதிர்மறை மதிப்பெண் (கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் 1/4) இருக்கும்.
ஊதியம்
விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ரூ.44,500 ஊதியம் வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.89,150 வரை கிடைக்கும்.
முக்கிய அறிவிப்பு
Ø ஆன்லைனில் மட்டுமே இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
Ø விண்ணப்பக் கட்டணம் ரூ.1000/- OBC/ EWSs பிரிவினருக்கு +18% GST மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100/- +18% ஜிஎஸ்டி. கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் செபியின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
செபி கிரேடு ஏ அறிவிப்பு வெளியீடு : ஜூன் 22, 2023
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் : ஜூன் 22, 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09 ஜூலை 2023
ஆன்லைன் முதல் கட்ட தேர்வு - ஆகஸ்ட் 05
ஆன்லைன் தேர்வு Phase 2 : செப்டம்பர் 09, 2023
Ø விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என, செபி தெரிவித்துள்ளது.
Ø விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண், இ-மெயில் ஆகியவற்றில், தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும்.
Ø விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
Ø தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
Ø பொதுவான நிபந்தனைகள் என்ற தலைப்பில் விரிவான விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட லிங்கை, ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=293


Click it and Unblock the Notifications












