நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1226 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.36 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)
மொத்த காலியிடங்கள் : 1226
பணி : Circle Based Officers
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.36,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bank.sbi/web/careers எனும் இணையதளத்தின் மூலம் 29.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












