மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் காலியாக உள்ள Research Scientist, Project Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவப்பு வெளியிடப்பட்டள்ளது.

மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.43 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
SAMEER வேலை வாய்ப்பு 2021
SAMEER என்பது மத்திய அரசிற்கு உட்பட்ட அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நிறுவனமாகும். சென்னையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு காத்திருப்போர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்
SAMEER நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Research Scientists பதவிக்கு 8 பணியிடங்கள், Project Assistant - A (Electronics) பதவிக்கு 1 பணியிடங்கள், Project Assistant - C (Electronic Mechanic) பதவிக்கு 2 பணியிடங்கள், Project Assistant - C (Fitter Trade) பதவிக்கு 1 பணியிடங்கள் என மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி
Research Scientists பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E., B.Tech, M.E, M.Tech முடித்திருக்க வேண்டும்.
Project Assistant - A (Electronics) - அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Assistant - C (Electronic Mechanic), Project Assistant - C (Fitter Trade) உள்ளிட்ட பணிக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
Research Scientists, Project Assistant - A (Electronics) பணிக்கு வயதானது அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டும், Project Assistant - C (Electronic Mechanic), Project Assistant - C (Fitter Trade) பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதிய விபரம்
SAMEER நிறுவனத்தின் மேற்கண்ட பணிகளுக்கு இதன்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Research Scientists - ரூ. 30,000 முதல் ரூ. 42,800 மாதம்
Project Assistant - A (Electronics) - ரூ.17,000 முதல் ரூ22,400 மாதம்
Project Assistant - C (Electronic Mechanic) - ரூ.23,600 முதல் ரூ.29,600 மாதம்
Project Assistant - C (Fitter Trade) - ரூ.23,600 முதல் ரூ.29,600 மாதம்
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ''மின்காந்தவியல் மையம், 2வது குறுக்கு சாலை, சிஐடி வளாகம், தரமணி, சென்னை-600 113.'' எனும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 15.12.2021 மற்றும் 16.12.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு குறித்த மேலும் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
மேலும் விபரங்களுக்கு
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cem.sameer.gov.in/ அல்லது https://cem.sameer.gov.in/recruitments.php என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












