பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்குடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க, ஒரு புதிய திட்டத்தை துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் அக்.,15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : சேலம் மாவட்ட சமூக நலத்துறை (Salem District Social Welfare)
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
Ø வழக்கு பணியாளர் (Case Worker)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2023
கல்வி தகுதி
Ø Case Worker பணி
சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனித வள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை பெற்றிருத்தல் அவசியம்.
ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு வருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சேலத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
ஊதியம் விவரம்
Ø Case Worker - ரூ.15,000
விண்ணப்பங்களை சுய விவர குறிப்புடன், தேவையான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 15.10.2023
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சேலம்.
தொடர்புக்கு - 0427 - 2413213
விண்ணப்பங்களை 15.10.2023க்குள் அனுப்ப வேண்டும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு முறை
இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












