இந்திய விளையாட்டு ஆணையம் என்று அழைக்கப்படும் சாய் (Sports Authority of India -SAI) அமைப்பில் இளநிலை ஆலோசகர் (Junior Consultant-Infra) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு
https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1702358150_ADVERTISEMENT FOR THE POST OF JUNIOR Consultant.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984-ல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு தன்னாட்சி அமைப்பாகும்.

இந்த அமைப்பின்கீழ் பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவாஹாட்டி, போபால், லக்னோ, சோனிபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன.
பாட்டியாலாவிலுள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுனருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த பெருமைமிகு சாய் அமைப்பில்தான் தற்போது ஜூனியர் கன்சல்டன்ட் (Junior Consultant) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் ஆலோசகர் பணியிடத்துக்கு கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பி.இ., பி.டெக், பிஜிடிஎம், எம்பிபிஎஸ், எல்எல்பி, சிஏ, ஐசிடபிள்யூஏ, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, எம்பிஏ (BE/ B. Tech / PGDM / MBBS / LLB / CA / ICWA / Degree / Post-Graduation / MBA) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்க விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பணியிட ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1702358150_ADVERTISEMENT FOR THE POST OF JUNIOR Consultant.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












