மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்-SAI) சீனியர் லீட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984-ல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு தன்னாட்சி அமைப்பாகும்.

இந்த அமைப்பின்கீழ் பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவாஹாட்டி, போபால், லக்னோ, சோனிபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன.
பாட்டியாலாவிலுள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுனருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த பெருமைமிகு சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) அமைப்பில்தான் தற்போது சீனியர் லீட் (Senior Lead ) பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 24.12.2023க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்தப் பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டமேற்படிப்பு, பி.ஜி.டிப்ளமோ, மாஸ்டர் டிகிரி, பி.இ, பி.டெக் படிப்புகளில் (Master Degree / Post Graduate Diploma / Master's Degree/ B.E/B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,45,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் டிசம்பர் 24 (24.12.2023) க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.விண்ணப்பம் டவுன்லோடு, வயதுத்தகுதி, கல்வித்தகுதி போன்ற விவரங்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












