ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்- RVNL) நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர், சீனியர் மேலாளர் (Deputy General Manager / Senior Manager -Electrical) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://rvnl.org/RVNL_cms/uploads/careers/56-ELEC.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும், இது ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவாக திட்ட செயலாக்கம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு விவகாரங்களுக்காக செயல்படுகிறது.
இது 2003-ல் நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், விரைவான பாதையில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், ரயில்வே உபகரணங்கள் கட்டுமான நிறுவனத்தை உருவாக்குவதற்கும் இணைக்கப்பட்டது. இது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் உள்ள 'நவரத்னா' CPSE விருது பெற்ற நிறுவனமாகும்.

கருத்தாக்கம் முதல் ஆணையிடுதல் வரை திட்டச் செயலாக்கத்தை நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும் திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு திட்ட ஆணையிடுதலையும் உருவாக்குகிறது.
இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமான தேசிய ரயில் விகாஸ் யோஜனாவை (NRVY) செயல்படுத்த ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவப்பட்டது. 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையின் போது அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் செங்கோட்டையில் அறிவித்தார். டிசம்பர் 2002 அன்று பிரதமர் வாஜ்பாயினால் என்ஆர்விஒய் முறையாகத் தொடங்கப்பட்டது, மேலும் RVNL நிறுவனச் சட்டம், 1956இன் கீழ் இணைக்கப்பட்டது.
இந்த பெருமைமிகு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில்தான் தற்போது துணைப் பொது மேலாளர், சீனியர் மேலாளர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 11-ம் தேதி (11.1.2024) வரை பெறப்பட உள்ளன.
அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering) துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
துணைப் பொது மேலாளர், சீனியர் மேலாளர்(Deputy General Manager / Senior Manager (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்த ஆர்விஎன்எல் (RVNL) நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பேரன்ட் பே பிளஸ் டெபுடேஷன் அலவன்ஸ்( Parent Pay Plus Deputation Allowance) விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
துணைப் பொது மேலாளர், சீனியர் மேலாளர்(Deputy General Manager / Senior Manager (Electrical) பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.1.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு
https://rvnl.org/RVNL_cms/uploads/careers/56-ELEC.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












