ரயில் இந்தியா டெக்னிக்கல் அன்ட் எகனாமிக் சர்வீஸ் என்று அழைக்கப்படும் ரைட்ஸ்( RITES) நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் அற்புதமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.3,60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் இங்கு உள்ளன.
ரைட்ஸ் நிறுவனத்தில் தற்போது பைனான்ஸ் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட்(Finance Management Specialist), டிஸ்பர்ஸ்மெண்ட் சப்போர்ட் (Disbursement Support), காஸ்ட் எக்ஸ்பர்ட் (Cost Expert) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரைட்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு ரயில் இந்தியா டெக்னிக்கல் அன்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். நவரத்னா அந்தஸ்தை பெற்ற இந்நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

1974-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் தொடங்கப்பட்டது. இது ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாகும், இது ரயில்வே அமைச்சகத்துக்குத் தேவையான ஆலோசனைகள், திட்டங்கள், விரிவான சேவைகளை வழங்கி வருகிறது. போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் அனைத்து அம்சங்களிலும் விரிவான ஆலோசனைகளை தந்து வருகிறது.
இந்த பெருமைமிகு நிறுவனத்தில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தற்போது இங்கு மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பைனான்ஸ் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்டில் ஒரு இடம், டிஸ்பர்ஸ்மெண்ட் சப்போர்ட் பிரிவில் ஒரு இடம், காஸ்ட் எக்ஸ்பர்ட் பிரிவில் 2 பணியிடம், ஹெல்த் கேர் பிளானிங் எக்ஸ்பர்ட் பிரிவில் ஒரு பணியிடம், சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினீயர் பிரிவில் ஒரு பணியிடம், என்விரான்மென்டல் சோஷியல் மானிட்டரிங் ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் 3 பணியிடங்கள் உள்ளன.
பைனான்ஸ் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் பிரிவுக்கு சிஏ, சிடபிள்யூ, எம்பிஏ படித்து 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தேவை. அதேபோல் டிஸ்பர்ஸ்மெண்ட் சப்போர்ட் பிரிவுக்கு பி.காம் படித்து, 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் தேவை.
காஸ்ட் எக்ஸ்பர்ட் பிரிவுக்கு பி.இ. அல்லது பி.டெக் படித்து 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர்.
ஹெல்த்கேர் பிளானிங்ஸ் எக்ஸ்பர்ட் பணிக்கு பட்டப்படித்து 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் மெக்கானிக்கல் இன்ஜீனியர் பதவிக்கு பி.இ., பி.டெக் முடித்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படுகின்றனர்.
என்விரான்மென்டல் சோஷியல் மானிட்டரிங் ஸ்பெஷலிஸ்ட் பிரிவுக்கு பி.இ., பி.டெக், எம்.எஸ்சி படித்து 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர்.
வயதுத்தகுதி பணிகளுக்கு ஏற்ப மாறுபடும்
Finance Management Specialist பணிக்கு ரூ.2,10,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும், Disbursement Support பணிக்கு ரூ.45,500/- முதல் ரூ.51,500/- வரை என்றும். Cost Expert பணிக்கு ரூ.1,70,00/- முதல் ரூ.2,30,000/- வரை என்றும்,
Health Care Planning Expert பணிக்கு ரூ.3,40,000/- முதல் ரூ.3,60,000/- வரை என்றும், Senior Mechanical Engineer பணிக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.1,70,000/- வரை என்றும், Environmental Social Monitoring Specialist பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமாக உள்ள நபர்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.rites.com/Career என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












