மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், மூத்த மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேலாளர், மூத்த மேலாளர், அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 18
கல்வித் தகுதி :
மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் (Finance) பணிக்கு - CA, CMA, B.com, BMS, BAF, BBA, MBA, MMS போன்ற துறைகளில் தேர்ச்சியுடன் 12 முதல் 20 ஆண்டுகள் வரை பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Officer (Finance) பணிக்கு CA, CMA தேர்ச்சியுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
மேலாளர் பணி - 47, மூத்த மேலாளர் - 53, ஆபிசர் பணிக்கு 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.2,40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ors.rcfltd.com/Candidate/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.08.2021 அன்று முதல் 04.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின் நேர்முகத் தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcfltd.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












