ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தில் (PNGRB) காலியாக உள்ள Private Secretary, Personal Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தில் (PNGRB) காலியாக உள்ள Private Secretary, Personal Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Private Secretary, Personal Assistant, Cashier, Asst Data Entry Operator மற்றும் Senior Secretariat Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடம் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.pngrb.gov.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.02.2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pngrb.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PNGRB Recruitment 2022: Apply for Secretary, Personal Assistant, Cashier & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X