மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுநிலை நிறுவன (Postgraduate Institute of Medical Education and Research- PGIMER) பல்கலைக்கழகத்தில் திட்ட விஞ்ஞானி(Project Scientist I) பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://pgimer.edu.in/PGIMER_PORTAL/PGIMERPORTAL/Vacancies/JSP/ViewAll.jsp?record=11037 என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (PGIMER) பல்கலைக்கழகம் என்பது ஒரு பொது மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகும். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இது அனைத்து சிறப்புகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டிகள் மற்றும் துணை சிறப்புகள் உட்பட அதன் மாணவர்களுக்கு கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை செவ்வனே வழங்கி வருகிறது.
இது வட இந்திய பிராந்தியத்தின் முன்னணி மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை மற்றும் பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பிஹார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய அனைத்து பகுதிகளிலிருந்தும் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. மருத்துவ சேவைகள் தவிர, PGIMER பல்கலைக்கழகமானது முதுகலை மற்றும் முதுகலை பட்டங்கள், டிப்ளோமா க்கள், பெல்லோஷிப் கள் உட்பட மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் பயிற்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் உள்ளன.
இந்த பிஜிஐஎம்ஆர் சார்பில் 100 எம்பிபிஎஸ் சீட்கள் கொண்ட எம்பிபிஎஸ் கல்லூரி 2025ஆம் ஆண்டு சரங்பூரில் உள்ள பிஜிஐயின் செயற்கைக்கோள் மையத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவன (பிஜிஐஎம்ஆர்) பல்கலைக்கழகத்தில் தான் தற்போது திட்ட விஞ்ஞானி பணியிடம் காலியாக உள்ளது. தற்போது இங்கு ஒரே ஒரு பணியிடம் காலியாகவுள்ளது.

புராஜக்ட் சயின்டிஸ்ட் பணியிடத்துக்கான கல்வித்தகுதி:
புராஜக்ட் சயின்டிஸ்ட் பணியிடத்துக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டமேற்படிப்பு அல்லது பி எச்.டி. (Post Graduate Degree அல்லது Ph.D) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் சயின்டிஸ்ட் பணியிடத்துக்கான வயதுத்தகுதி:
இந்த விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருத்தல் அவசியமாகும்.
புராஜக்ட் சயின்டிஸ்ட் பணியிடத்துக்கான மாத சம்பளம்:
இந்த விஞ்ஞானி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.66,080/- மாத சம்பளமாக பெறுவர்.
புராஜக்ட் சயின்டிஸ்ட் பணியிடத்துக்கு தேர்வு செய்யும் முறை:
இந்த விஞ்ஞானி பணிக்கு தகுதியான நபர்கள் 15.1.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 8.1.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு https://pgimer.edu.in/PGIMER_PORTAL/PGIMERPORTAL/Vacancies/JSP/ViewAll.jsp?record=11037 என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












