தமிழக அரசிற்கு உட்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், செவிலியர், சமையலர், Machine Operator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 140 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Machine Operator - 20
- Staff Nurse - 50
- Driver - 30
- Cook - 30
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-வது தேர்ச்சி, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 22 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Machine Operator - ரூ.29,100
- Staff Nurse - ரூ.80,000 முதல் ரூ.1,20,000
- Driver - ரூ.27,000 முதல் ரூ.34,500
- Cook - ரூ.36,000 முதல் ரூ.37,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 30.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.omcmanpower.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












