மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்
பணி : மூத்த அதிகாரி
மொத்த காலிப் பணியிடம் : 48
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
(பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்)
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : http://www.oil-india.com/Current_openNew.aspx
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












